கொங்கு மங்களம் குழுவினரின் இரண்டாம் ஆண்டு கொங்கு மணமகன் மணமகள் அறிமுக விழா விரைவில்- நமது சிங்காரச் சென்னையில்- 5.10.2025.
கொங்கு சமுதாயத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் திருமணம் தள்ளிப் போகின்ற சமுதாய சவாலை கருத்தில் கொண்டு, சமூக அக்கறையுடன், கொங்கு மங்களம் குழு , இந்த கொங்கு மணமகன் மணமகள் அறிமுக விழாவை இரண்டாவது ஆண்டாக அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை துவக்கியுள்ளது
To Apply/Register the event Entry pass
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
கொங்கு மணமகன் மற்றும் மணமகள் தகவல்களை அறிமுகப்படுத்துவது மட்டுமே இந்த நிகழ்ச்சியில் நோக்கம்.
எந்த விதமான ஜாதகத்தையோ, ஆவணங்களையோ நாங்கள் வாங்குவதும் இல்லை, பதிவு செய்வதுமில்லை. வரிசை முறையில் அழைப்பதற்கும் , அறிமுகப்படுத்துவதற்கு மட்டுமே, சில அடிப்படை தகவல்கள் இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமே உபயோகப்படும் வகையில் பெறப்படுகின்றன.
நிகழ்ச்சியின் நேரம் கருதி, முதலில் பதிவு செய்யும் சுமார் 150-250 பேருக்கு மட்டுமே மேடையில் அறிமுகம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
மழை அல்லது முன்பதிவு எண்ணிக்கை அதிகமானால், சொந்தங்களின் வசதிக்கேற்ப, மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, தகவல் தெரிவிக்கப்படும்.
முன்பதிவு கட்டணம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மட்டுமே.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பதிவு /அனுமதி கட்டணம்:
1. மணமகன் /மணமகள் அறிமுகப்படுத்த முன்பதிவு /அனுமதி கட்டணம் -ரூ 2000. (நபர் ஒருவருக்கு)
2. மணமக்களின் தாய் தந்தை மற்றும் உடன் வருபவர்களுக்கு -ரூ 500.(நபர் ஒருவருக்கு)
விழா ஏற்பாடுகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுவதால் அனுமதி கட்டணம் திரும்பப் பெரும் வாய்ப்பு கிடையாது.
கொங்கு சமுதாயத்தின் மாண்பிற்கு உட்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் விதிமுறைகளை ஏற்று, விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிட அன்போடு வேண்டுகிறோம்.
தங்களுடைய அனுமதி சீட்டு பதிவை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் கொங்கு மங்களம் குழுவிற்கு முழு உரிமை உள்ளது.
சமூக பொறுப்புணர்ச்சியின் காரணமாக காரணங்களை எங்களால் வெளியில் தெரிவிக்க இயலாது .
அடுத்த கட்ட திருமண நகர்விற்க்கு செல்வதற்கு முன், மணமகன்/ மணமகள் குறித்த குலம், கோவில் உள்ளிட்ட தீவிர உண்மை தன்மையை ஆராய்ந்து முடிவெடுத்துக் எடுத்துக்கொள்ள அன்போடு வேண்டுகிறோம்.
அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது.